இந்திய பங்குச் சந்தையை கடந்த இரண்டு வாரங்களாக நல்ல ஏற்றத்தை கண்ட நிலையில் இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் மந்தமாகவே வர்த்தகமாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்றும் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி பங்குச்சந்தை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் வெறும் 20 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 81 ஆயிரத்து 551 என்ற புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது.
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி ஒன்பது புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 632 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, ஐசிஐசிஐ வங்கி, எண்டஸ் & எண்டு வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார், சன் பார்மா, SBI வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, இந்துஸ்தான் லீவர், எச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட் ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.