அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால் இந்திய பங்குச்சந்தை உயரும் என்ற பங்கு சந்தை நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், அவர் தற்போது முன்னிலையில் இருப்பதால் இந்திய பங்குச்சந்தை தற்போது உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய முதலே ஏற்றத்தில் இருந்த சென்செக்ஸ் 469 புள்ளிகள் உயர்ந்து 79,945 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 150 புள்ளிகள் உயர்ந்து 24,404 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகின்றன.
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி போன்ற பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், கோடக் வங்கி போன்ற பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.