தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் ஒரு சவரன் தங்கம் விலை 67 ஆயிரத்தை நெருங்கிவிடும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய விலையில் இருந்து இன்று தங்கம் விலை ஒரு கிராம் 40 ரூபாயும் ஒரு சவரன் 320 ரூபாயும் குறைந்துள்ளதை அடுத்து ஒரு சவரன் 66,000 ரூபாய்க்கும் இன்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து நிலவரங்களை பார்ப்போம்.
Gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும், சமீபத்தில் 66,000 ஒரு சவரன் விற்பனையாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ரூபாய் 8,230 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 சென்னையில் ரூபாய் 65,840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,978 எனவும் ஒரு சவரன் ரூபாய் 71,824 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 110.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 110,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது