ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

vinoth

சனி, 22 மார்ச் 2025 (06:44 IST)
ஐபிஎல் 2025 சீசன் தொடங்க இன்று தொடங்கவுள்ளது. இன்று கொல்கத்தாவில் நடக்கும் போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த ஆண்டு மெஹா ஏலத்துக்குப் பிறகு ஒவ்வொரு அணியும் பல  பழைய வீரர்களைக் கழித்துக் கட்டி புதிய வீரர்களை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மெஹா ஏலத்தில் ஷர்துல் தாக்கூர் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படாதது, ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்பட்டது. முதலில் சென்னை அணிக்காக விளையாடிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மெஹா ஏலத்தில் கே கே ஆர் அணியால் வாங்கப்பட்டார். அதன் பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் மினி ஏலத்தில் சி எஸ் கே அணிக்கே திரும்பியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த மோசின் கான் காயம் காரணமாக விலக, அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூரை அந்த அணி வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்