தங்கம் விலையில் இன்று ஏற்றமா? சரிவா? சென்னை நிலவரம்..!

Mahendran

சனி, 17 மே 2025 (10:41 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் கடும் ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டன. மே 12 ஆம் தேதி தங்கம் விலை திடீரென சரிந்து, ஒரு பவுன் ரூ.70,000 ஆக வந்தது. அதன்பின் சிறிது உயர்ந்த நிலையில் இருந்தாலும், மே 14-ம் தேதி மீண்டும் விலை ரூ.1,560 வரை குறைந்து, ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழே சென்றது.

அதையடுத்து, மே 15-ம் தேதி விலை மீண்டும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,720, பவுனுக்கு ரூ.69,760 ஆக உயர்ந்தது. இது கடந்த 5 நாள்களில் ஏற்பட்ட விலை மாற்றங்களை காட்டிலும் மீண்டும் ₹70,000 அருகே தங்கத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை.  நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது. அதாவது இன்று சென்னையில் தங்கம் ஒரு கிராம் ரூ.8,720, ஒரு பவுன் ரூ.69,760 என விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையிலும் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை ஆகிறது.

 Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்