கடந்த பத்தாம் தேதி, ஒரு சவரன் ரூ.64,000 என்ற விலையில் விற்பனையானது. ஆனால் இன்று, ரூ.66,320 என விற்பனை ஆகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த வாரத்திற்குள், தங்கத்தின் விலை ரூ.67,000 அருகில் செல்லும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றைய விலையை ஒப்பிடும்போது, இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.40 மற்றும் ஒரு சவரன் ரூ.320 உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், வெள்ளியின் விலையும் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,000 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூபாய் 8,290 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 உயர்ந்து ரூபாய் 66,320 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,043 எனவும் ஒரு சவரன் ரூபாய் 72,344 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 114.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 114,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது