தங்கம் விலை நேற்று ஒரு சவரன் ரூபாய் 65,000 ஐ நெருங்கிய நிலையில் இருந்தது. ஆனால், இன்று ஒரே நாளில் 880 ரூபாய் உயர்ந்து, 66,000 ரூபாயை நெருங்கியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று, ஒரு கிராம் தங்கம் 110 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், ஒரு சவரன் 880 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ. 65,840 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இன்னும் சில மாதங்கள் இதே மாதிரி உயர்ந்தால் ஒரு சவரன் விலை ரூ. 1,00,000 எட்டினாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என்று கூறப்படுகிறது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையின் நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ரூபாய் 8,230 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 880 உயர்ந்து ரூபாய் 65,840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,978 எனவும் ஒரு சவரன் ரூபாய் 71,824 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 112.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 112,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது