இந்த நிலையில், இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு வெறும் 10 ரூபாய், ஒரு சவரனுக்கு 80 ரூபாய் மட்டும் குறைந்துள்ளது. இருப்பினும், 66 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டே இருப்பதால், தங்கம் வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 8,210 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 80 குறைந்து ரூபாய் 65,680 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,956 எனவும் ஒரு சவரன் ரூபாய் 71,648 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 113.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 113,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது