படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

Siva

செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (09:54 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்துக்கு சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நேற்றைய விலையில் இருந்து, இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.35 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இன்னும் சில நாட்களில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தங்கம் விலை குறைந்துள்ள போதும், வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.2000 என்று அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து பார்ப்போம். 
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ.8,755
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ.8,720
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ.70,040
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ.69,760
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: 9,550
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: 9,512
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: 76,400 
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: 76,400
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.110.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.110,000.00

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்