தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. நேற்று போல் மாலையில் உயருமா? இன்று ஒரு சவரன் எவ்வளவு?

Siva

வெள்ளி, 3 அக்டோபர் 2025 (09:51 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. ஆனால், நேற்று போல் காலையில் குறைந்து மாலையில் உயருமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
 
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ₹110/- ரூபாயும், ஒரு சவரனுக்கு ₹880/- ரூபாயும் குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஆனால், கடந்த சில நாட்களாகவே காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என்று இருப்பதால், மாலை நிலவரம் என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,950
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,840
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 87,600
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 86,720
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,945
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,825
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 95,560
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  94,600
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 161.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 161,000.00
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்