ஒரே நாளில் தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. இன்று மட்டும் 680 ரூபாய் குறைவு..!

Siva
திங்கள், 3 பிப்ரவரி 2025 (10:52 IST)
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 85 ரூபாயும் ஒரு ஒரு சவரனுக்கு 680 ரூபாயும் குறைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் நாகை பிரியகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியானதாகவும் உள்ளது.
 
கடந்து சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் இன்று திடீரென தங்கம் விலை குறைந்திருப்பதால் இன்னும் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து ரூபாய்   7,705 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 680 குறைந்து ரூபாய்  61,640 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8405 எனவும் ஒரு சவரன் ரூபாய் 67,240 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்