ஓமம் 1 மேஜை கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, நீரை வடி கட்டி தனியே வைக்கவும். ஊறிய ஓமத்தை மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்திருக்கும் ஓமத்தண்ணீருடன் கரைத்து வடி கட்டிக்கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் ஓமத் தண்ணீரை சேர்த்து பிசையவும். பிறகு அதனுடன் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முறுக்கு குழலில் ஓமப்பொடி அச்சை போட்டு குழல் கொள்ளும் அளவுக்கு மாவை வைத்து பிழியவும்.
ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் பிழிந்து எடுக்கவும்.