யாருக்கு எந்த கலர் ரோஜாப்பூ தரவேண்டும் தெரியுமா?Valentine’s Week: Rose Day!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (11:41 IST)
இன்று காதலர் வாரம் “ரோஸ் டே”வுடன் தொடங்கும் நிலையில் எந்தெந்த நிற ரோஜா பூக்கள் என்ன அர்த்தம் கொண்டது அதை யாருக்கு தரலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு மிகவும் பிடித்த மலர்களில் ரோஜாப்பூ முக்கியமானதாக உள்ளது. காதலர் வாரத்தின் முதல் நாள் ரோஜாப்பூ நாளில் (Rose Day) இருந்துதான் தொடங்குகிறது. உங்களுக்கு பிடித்தவர்கள் காதலர்களை தவிர்த்து வேறு பலரும் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் தரும் பலவிதமான வண்ணம் கொண்ட ரோஜாப்பூக்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.

வெள்ளை ரோஜா

வெள்ளை ரோஜா நேர்மையை குறிக்கும் ஒரு பூ ஆகும். தூய்மையின் அடையாளமாக கருதப்படும் வெள்ளை ரோஜாவை அன்புக்குரிய எவருக்கும் வழங்கலாம். திருமணம் நிச்சயிக்கப்பட்ட தம்பதிகள் வெள்ளை ரோஜாவை பகிர்ந்து கொள்வது ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டதை குறிக்கிறது.

சிவப்பு ரோஜா

சிவப்பு ரோஜா குறிக்கும் ஒரேயொரு சொல் காதல் மட்டுமே. நாம் அளவுக்கடந்து காதலிக்கும் பெண் ஒருவருக்கு பெரும்பாலும் சிவப்பு ரோஜாவை வழங்குவதன் அர்த்தம் “நான் உன்னை காதலிக்கிறேன்” என்ற உணர்வை வெளிப்படுத்துவதற்காகதான். சிவப்பு ரோஜா காதலர்களுக்கு மட்டுமே உரித்தானது.

பிங்க் ரோஜா (இளஞ்சிவப்பு ரோஜா)

இளஞ்சிவப்பு ரோஜாப்பூ மகிழ்ச்சியை குறிக்கிறது. இது மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. பிறரது செயல்களை பாராட்டும் வகையில் இந்த இளஞ்சிவப்பு ரோஜா அளிக்கப்படுகிறது.

மஞ்சள் ரோஜா

மஞ்சள் ரோஜா நட்பை குறிக்கும் மலர் ஆகும். ஒரு நண்பரின் நட்பில் நாம் அடையும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவோ அல்லது அவரது வளர்ச்சியை வாழ்த்தவோ மஞ்சள் ரோஜாவை அவருக்கு கொடுக்கலாம்.

நீல ரோஜா

நீல ரோஜா புதிய நட்புகளை உருவாக்கும் மலர் ஆகும். ஒருவரை பார்த்து நமக்கு பிடித்து போகிறது, தொடர்ந்து அவரது நட்பில் இருக்க விரும்புகிறோம் என்றால் அதை மறைமுகமாக வெளிப்படுத்தும் விதமாக நீல நிற ரோஜாவை அளிக்கலாம்.

இரட்டை வண்ண ரோஜா

ஒரு ரோஜாப்பூவில் இரண்டு வண்ணங்கள் கலந்த ரோஜா இரட்டை ரோஜா என கூறப்படுகிறது. இந்த மலரை பொதுவாக திருமண கோரிக்கைக்காக அளிக்கின்றனர். நீங்கள் யாரையாவது மணம் செய்து கொள்ள விரும்பினால் அவர்களிடம் இரட்டை வண்ண ரோஜாவை அளித்து உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்.

இவை யாவும் வெளிநாடுகளில் ரோஜா மலரின் வண்ணத்தை பொறுத்து அவர்கள் வகுத்து வைத்திருக்கும் வழிமுறை. ஆனால் நமது நாட்டில் ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு ரோஜா மலர் தருவதின் (அது என்ன வண்ணமாக இருந்தாலும்) அடிப்படை அர்த்தமே ஒன்றாக மட்டும்தான் புரிந்து கொள்ளப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்