எடைக்கு எடை லட்டு : பிரியங்கா காந்தி என்ன செய்தார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (08:38 IST)
எடைக்கு எடை லட்டு விநியோகம் செய்ய  வேண்டும் என காங்கிரசார் கேட்ட நிலையில் பிரியங்கா காந்தி தராசில் அமர்வதற்கு மறுத்துவிட்டார்.
 
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் தன்னுடைய அண்ணன் ராகுல் காந்திக்கு ஆதரவாக 3 நாட்கள் பிரச்சாரம் செய்ய  பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் நள்ளிரவில் அமேதி வந்தார்.
 
உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஃபதே பகதூர் தனது  இல்லத்தில் பிரியங்காவுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்தார். அங்கு பிரியங்காவின் எடைக்கு எடை லட்டு விநியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டு,  அதற்காக மிகப் பெரிய தராசு அமைக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு புறம் லட்டு அடுக்கப்பட்டிருந்து. தராசின் மற்றொரு தட்டில் அமரும்படி பிரியங்காவை அங்கிருந்தவர்கள் அழைத்தனர். 
 
எனினும், அதனை மறுத்துவிட்ட பிரியங்கா, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஃபதே பகதுரையே தராசு தட்டில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அதையடுத்து, பகதூர் அந்தத் தட்டில் அமர்ந்தார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, நள்ளிரவில் பிரியங்காவுக்கு வரவேற்பு அளித்ததன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாக ஃபதே பகதூர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்