பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா சட்ட விரோதமாக லண்டனில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கில் அவர் ஆஜராகி வருகிறார். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமினும் பெற்றுள்ளார்.
இதையடுத்து நீதிபதி ராபர்ட் வதேராவை அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முறையாக ஆஜராகுமாறு உத்தரவிட்டார். மேலும் அவரை மார்ச் 25 ஆம் தேதி வரைக் கைது செய்ய தடை விதித்து வழக்கையும் ஒத்திவைத்துள்ளனர். மக்களவைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அமலாக்கத்துறை ராபர்ட் வதேராவைக் கைது செய்ய மும்முரம் காட்டுவது காங்கிரஸ் சிக்கலை உருவாக்கியுள்ளது.