சிவகங்கையில் களமிறங்கிய சௌகிதார் எச்.ராஜா: டெபாசிட் பெற முண்டியடிக்கும் கட்சிகள்

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2019 (08:59 IST)
சௌகிதார் எச்.ராஜா சிவகங்கையில் போட்டியிடுவதை முன்னிட்டு பாஜகவிற்கு எதிராக போட்டியிடும் கட்சிகள் டெபாசிட்டையாவது பெற வேண்டும் என முயற்சித்து வருகின்றன.
 
அதிமுக கூட்டணியில் தூத்துகுடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை மற்றும் சிவகங்கை என ஐந்து தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலை முறையாக கட்சி தலைமை அறிவிப்பதற்குள்ளேயே ஹெச்.ராஜா அதனை வெளியிட்டார். பின்னர் அது யூகங்களின் அடிப்படையிலான பட்டியலே என கூறி சமாளித்தார்.
 
இந்நிலையில் பாஜக மேலிடம் நேற்று தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படிதூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சிபி. ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
 
எச்.ராஜா சிவகங்கையில் போட்டியிடுவதை முன்னிட்டு பாஜகவிற்கு எதிராக போட்டியிடும் கட்சிகள் டெபாசிடையாவது பெற வேண்டும் என முயற்சித்து வருகிறார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்