இந்த நிலையில் நேற்று மும்பை வந்த பிரியங்கா காந்தி, அங்கு புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றார். தானே கற்பூரம் ஏற்றி விநாயகருக்கு அவர் தீபாராதனை காட்டினார். பிரியங்கா, சித்தி விநாயகர் கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த பாஜகவினர், கோவிலும் முன் கூடி 'மோடி வாழ்க' என கோஷமிட்டனர். பிரியங்கா காந்தி முன்னரே 'மோடி வாழ்க' என பெண்கள் உள்பட பொதுமக்கள் கோஷமிட்டதால் காங்கிரஸார் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஏதும் விபரீதம் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்புக்கு இருந்தனர்.