தமிழகத்தில் இன்று வேட்புமனு தொடக்கம்! முதல் நாளில் மனுதாக்கல் செய்பவர்கள் யார் யார்?

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (07:00 IST)
தமிழகம் மற்றும் புதுவை மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. இந்த வேட்புமனுவை வேட்பாளர்கள் வரும் 26-ந் தேதி வரை தாக்கல் செய்யலாம்
 
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் மற்றும் தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை வரும் 27ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப்பெற வரும் 29ம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வேட்புமனுக்களை பெறுவதற்காக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வேட்புமனுக்கள் பெறப்படும் இடங்களில் காவதுறை மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முதல் நாளாக இருந்தாலும் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் பெரும்பாலான முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. இருப்பினும் தமிழகம் முழுவதும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உண்டு.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்