திட்டம் போட்டு மறைக்கிறதா அதிமுக? அம்பலப்படுத்தும் பாஜக!!!

திங்கள், 15 ஏப்ரல் 2019 (17:59 IST)
வரும் 18 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. நாளை மாலையோடு பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவினாலும், மத்திய அரசுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்திற்கு பல நலத்திடங்களை கொண்டுவர முடியும் என அதிமுக தரப்பு தெரிவிக்கிறது. இதற்கு ஏற்றார் போல் கருத்து கணிப்புகளும் பாஜகவிற்கு ஆதரவாகவே உள்ளது. 
 
இப்படி இருக்க, ஆனால் அதிமுக கூறுவது போல் ஒன்றும் நடப்பது இல்லை. உதாரணத்திற்கு நீட் தேர்வு முறையைக் கைவிட வலியுறுத்தப்படும் என்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை. ஆனால் மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் நீட் தேர்வு தொடரும் என்று கூறுகிறார். 
அதேபோல், சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் கைவிடப்படும் என்கிறது அதிமுக. ஆனால் மத்திய அமைச்சரான நிதின் கட்கரி, விவசாயிகளை சமாதானப்படுத்தி, பாரத்மாலா பரியோஜன் திட்டத்தின் கீழ் அந்த எட்டு வழிச்சாலை போடப்பட்டே தீரும் என சொல்லிவிட்டார்.
 
அதாவது தமிழக நலனுக்கான அதிமுக கோரிக்கைகளை, தேர்தல் முடியும் முன்பே, ஆட்சி அமையும் முன்பே, செயல்படுத்த முடியாது என்று கூட்டணி கட்சி பாஜக திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. பின்னர், எதற்காக பாஜகவுடன் கூட்டணி, மக்களிடம் நன்மைகள் செய்துத்தருவோம் என்ற வாக்குறுதி? இதற்கு மக்கள்தான் தேர்தலில் பதில் கூற வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்