செய்வதைத் திருந்தச் செய்!-சினோஜ் கட்டுரைகள்

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (22:46 IST)
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பேராசான் திருவள்ளுவர் ஊழையும் உப்பக்கம் காண்பர் உழைவின்றித் தாளாது உஞற்று பவர் என்ற குறளுக்குப் பொருள்: ஒரு துறையிலும் தொடர்ந்து உழைக்கின்றவர் அதற்கு இடையூறாக வரும் காலத்தைக்கூட தோல்வியடையச் செய்யும் திறம் பெற்றவர் என்று கூறுகிறார்.

இப்பொது உள்ள மாணவர்களை இம், என்று ஏன் என்று கேட்டால்கூட  பொசுக்கென்று கோப்படுகிறார்கள்; அல்லது கோபித்துக் கொள்கிறார்கள்.

மேகத்தில் இருந்து பூமிக்குக் குதித்தால்தான் அது  மழை!

வானத்திற்கு மேல் இருந்து கொதிக்கும் தணலுடன் இருந்தால் தான் அது சூரியன்.
இரவில் நம்மை இதமாக்க, கடலில் அலைகளின் தாலாட்டிற்குச் செவி சாய்த்தால் தான் அது சந்திரன்.

உனக்குள் போராடும் சக்தி இருந்தால்தான் நீ மானிடன்!

ஆங்கிலேயே ஆட்சியில் பிரிட்டிஷ் காரர்களின் ஆளுகையில் இந்தியர்களின் பாடுகள் எல்லாம் சொல்லி மாளாது.

அத்தனை துயரக்காவியங்கள் அனைத்தும் நடந்தேறியது.

சொந்த மண்ணிலேயே அடிமைப்பட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, மூச்சுவிடுவதற்குக்கூட அனுமதி கேட்பதுபோல் மக்கள் சிரமப்பட்டனர்.

மகாகவி பாரதியார் ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே என்று கனல் தெறிக்கும் தன் கவிதைகளில் தீர்க்க தரிசனத்தை முன்வைத்துப்பாடினார்.

தன் பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தில் ஆங்கிலேயர்களை மறைமுகமாகச் சாடியிருந்தார்.

அதில், அஸ்தினாஸ்புரத்தில், துரியோதனன் சபையில், திரெளபதியின் துகில் உருவும்போது, அவளின் மானம் காக்க அவளுக்கு சேலை கொடுத்து உதவிய கண்ணனைப் போல் இந்த தேசம் காக்க ஒரு கண்ணன் வருவார் என்று தீர்க்க தரிசமாகத் தெரிவித்தார்.

அதன்படி, தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த 1915 ஆம் ஆண்டு ஜனவரி  9 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தார்.

அவருடைய வருகை இந்தியா முழுவதும் ஒரு புதிய அலையடிக்கத் தொடங்கியது.
புத்தர் காலத்தில் இருந்த அதே அஹிம்சையை தன் வாழ்க்கையில் கொண்டு வந்ததுடன், தன்  நாட்டு மக்களுக்கும் போதித்தார்.

இந்த  அமைதியென்ற அஹிம்சை மனிதனைப் பார்த்து சூரியன் மறையாத பெருமையும், பீரங்கிப் பேராயுதத்தையும் கொண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் திணறியது.

பல சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் காந்தியும் போற்றப்பட்டார். மகாத்மா காந்தியாக  உயர்ந்தார்.

அவரது  ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், சத்தியாகிரம், தண்டி யாத்திரை எல்லாம் விடுதலைக்கு எக்காலமிட்டது.

தன் பாரிஸ்டர் பட்டம் பெற்ற வக்கீல் வேலையை விட்டுவிட்டு, முழுமனதோடு, நாடு சுதந்திரம் பெற  உழைத்தார்.

அவர் பதவிகளையும் பட்டங்களையும் விரும்பவில்லை. உலகின் உயர்ந்த விருதுகளை விரும்பவில்லை.

தன் தேசமும், மக்களின் வாழ்க்கையையும் நேசித்த அவர், தேசத்திற்காக தன்னை அர்பணித்தார்.


ALSO READ: ஒரு துறையில் சாதிப்பது எப்படி?- சினோஜ் கட்டுரைகள்
 
அவரது வாழ்வும், பணியும் எப்படியும் முழு ஈடுபட்டோடு, பல சோதனைகளைக் கடந்து சரித்திரச் சாதனையாகி உலகத் தலைவர்களுக்கு எல்லாம் முன்னோடியாகவும், முன் மாதிரியாவும் இருப்பதுபோல் நாமும் ஒரு துறையில், ஒரு செயலில் லட்சியத்தோடு, இருக்க அதில், சாதிக்க முனைவோம்.

எத்தனை நாட்களுக்குத்தான் நாம் வரலாற்றையே படித்துக் கொண்டிருபோம், ஒரு மாறுதலாக, நாம்மையும் வரலாறு பேச வேண்டுமல்லவா?

வரலாற்றில் இடம்பிடித்தவர்கள் எல்லாம் வெறுமனே நாட்களையும், பொழுதுகளையும் போக்கி வாழ்ந்தவர் அல்ல.

வரலாற்றுப் புத்தகத்தில் நாம் எந்தப் பக்கத்தில் இருக்கிறோம், எத்தனையாவது தலைப்பில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. அதற்கான செயலில் இறங்குவது கூட சாதனை தான்.

இங்கு வெற்றி என்பது, சினிமாவும், திரையில் தோன்றுவது மட்டுமே தான் இளைஞர்களுக்குத் தெரிகிறது.

ஒன்றுசொல்கிறேன்.

பூ விற்கும் அம்மா ஒருவர் தன் சொந்த முதலீட்டில் பூக்கள் வாங்கி, அதைக்  கை நோக நூற்று அப்பூக்களை விற்றுக் கொஞ்சம் காசு சேர்த்தால் அது வெற்றிதான்.

ஒரு ஐம்பது மாடிக் கட்டிட உச்சியில் ஆபத்திற்கு அஞ்சாமல் வேலை பார்த்து, அன்று மாலையில் உழைப்பிற்கான ஊதியத்துடன்,வீடுதிரும்பினால் வெற்றிதான்.

ஒரு மாணவன் ஆசிரியர் சொன்ன பாடத்தை, நடத்திய பாடத்தை அன்றே படித்துவிட்டு, எழுதிப்பார்த்து, பரீட்சைக்கு மட்டும் படிக்கின்ற  நாடகத்தை ஒத்திப் போட்டால் வெற்றிதான்.

அதனால், அன்றைய பாடத்தை அன்றே படித்தால், பரீட்சைக்குப் பயப்படும் தேவையில்லை.

ஒவ்வொருவரும் அவர் செய்யும் வேலையைச் செவ்வனே செய்தால், அது வெற்றிதான்.

தன் வேலையில் கவனமின்றி மனதை ஊசலாட விட்டால் அதன் இழப்பு அவருக்குத்தானன்றி மற்றவருக்கு இல்லை.

காலம் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு வேலையில் முதலில் தொடங்கி, ஆரம்பித்த இடத்திலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அது வளர்ச்சியில்லை வீழ்ச்சி. எழுத்தாளரும், தையற்காரனும் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்.

இல்லையென்றால் காலம் அவர்களைத் தாண்டிச் செல்லும், அவர்கள் அங்கேயே சோக கீதத்தை எழுப்பிவிட்டு நிற்க வேண்டியதுதான்.

அதனால், செய்வதைத் திருந்தச் செய்தால் எங்கேயும், எப்போதும், எந் நாளும் வெற்றிதான்.

வெற்றியின் மீது ஆசை இல்லாதவர் யார்!

பூக்களில் தேன் உறுஞ்சிம் தேனீக்கள் கூட வானில் வட்டம் அடிப்பதில்லையா?

ஊரின் ஒரு மூலையில் ஓடும் நதி, கடலில் கலந்து உலகெல்லாம் செல்வதில்லையா?
அதனால், செய்யும் வேலையில் நிதானம்  நம்மை அழியாப் புகழின் உச்சிக்கும் அழைத்துச் சென்று, வெற்றிச் சிகரத்தில் அமரவைக்கும்.

தொடரும்.

#சினோஜ்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்