போன வாரம் ரஜினி, இந்த வாரம் கமல், அடுத்த வாரம் விஜய்?

Webdunia
திங்கள், 17 ஜூலை 2017 (23:59 IST)
மக்களிடம் சென்று வாக்கு கேட்க ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய தலைவர்கள் அல்லது பிரபல நடிகர்கள் தேவை. ஆனால் தற்போதைய நிலையில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு முக்கிய கட்சிகளிலும் கவர்ச்சியான தலைவர் என்று யாரும் இல்லை. 



 
 
இந்த நிலையில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் ஆட்சியை பிடிக்கவோ அல்லது அதிக வாக்குகள் பெறுவதற்கோ ஆன தகுதி இப்போதைக்கு ரஜினி, கமல் மற்றும் விஜய்யிடம் இருப்பதாக ஊகிக்கப்படுகிறது. 
 
எனவே இந்த மூன்று பெரிய நடிகர்களின் இமேஜை அடித்து நொறுக்கிவிட்டால் இப்போதைய தலைவர்களுக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. 
 
எனவேதான் ரஜினியும் கமலும் அடுத்தடுத்து கட்டம் கட்டப்பட்டதாகவும், அடுத்த வாரம் விஜய்யை அரசியல்வாதிகள் வம்புக்கு இழுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்