அசோக் செல்வனுடன் சேர்த்து வச்சு பேசிய ரசிகரை வச்சு வாங்கிய பிரகதி!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (14:50 IST)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர்.

அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் கூறப்பட்டது. அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆதாரமாகவும் வெளிவந்தது. ஆனாலும், அது வெறும் வதந்தி என இருவரும் விளக்கம் கொடுத்தனர்.

இருந்தும் தொடர்ந்து அவ்வப்போது இருவரையும் குறித்த கிசு கிசுக்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படியான நேரத்தில் பிரகதி ரசிகர்களுடன் லைவ் செட்டில் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் ஒரு இணையவாசி, நடிகர் அசோக் செல்வன் எப்படி இருக்கிறார்? என்று கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காமல் உடனடியாக பதிலளித்த பிரகதி, இதை நீங்கள் அவரிடம் தானே கேட்கவேண்டும் என கூறி செம நோஸ்கட் கொடுத்துட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்