கால்ஷீட் மட்டும்தான் பிரச்னையா?

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (16:35 IST)
ஒல்லி நடிகரின் படத்தில் இருந்து மில்க் நடிகை விலகுவதற்கு, கால்ஷீட் மட்டும் காரணமல்ல என்று கிசுகிசுக்கப்படுகிறது.

 
தேசிய விருது பெற்ற இயக்குநரின் படத்தில், ஒல்லியுடன் நடிப்பதாக இருந்த மில்க் நடிகை, நேற்று திடீரென அந்தப் படத்தில்  இருந்து விலகினார். கால்ஷீட் பிரச்னைதான் விலகலுக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால், உண்மையான காரணம்  வேறு என்கிறார்கள். 
 
சமீபத்தில், ஒல்லி இயக்கத்தில் வெளியான அந்தப் படத்துக்கு செம ரெஸ்பான்ஸ். எல்லோரும் பாராட்ட பாராட்ட…  ஒருகட்டத்தில் ஒல்லிக்கே ஒருமாதிரி ஆகிவிட்டதாம். இந்தப் பெயரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால், இதுநாள்  வரை எடுத்திருந்த கெட்ட பெயரை பினாயில் ஊத்தியாவது கழுவ வேண்டும் என்று நினைத்தாராம். அதன் முதல்படிதான்,  தன்னுடன் சேர்த்து பேசப்படும் நடிகைகளைத் தள்ளி வைப்பது. அப்படித்தான் மில்க் நடிகை விலகினாராம். போகப்போக  ஒல்லியின் நட்புப் பட்டியலில் இருந்த பலர் விலகக்கூடும் என்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்