காதல் தோல்வியால் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற நடிகர்

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (06:49 IST)
பிரபல கன்னட நடிகர் ஹூச்சா வெங்கட், நடிகை ரச்சனாவை காதலித்ததாகவும், தன்னுடைய காதலை ரச்சனா ஏற்காததால் ஏற்பட்ட விரக்தியில் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் வெளிவந்துள்ள செய்தி கன்னட திரையுலகை திடுக்கிட வைத்துள்ளது.



 


தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெங்கட் உறவினர்கள் இதுகுறித்து கூறியபோது, 'ரச்சனா மீது வெங்கட் உயிரையே வைத்திருந்ததாகவும், ஆனால் வெங்கட்டின் காதலை ரச்சனா உதாசீனப்படுத்தியதால் வெங்கட் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்

இதுகுறித்து ரச்சனா கூறியபோது, 'நான் வெங்கட்டை ஒருபோது காதலிக்கவில்லை. அவர் பினாயிலைக் குடித்து தற்கொலை செய்துள்ள துணிந்ததற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமே கிடையாது. வெங்கட் பெண்களை மதிப்பவர். அதனால் தான் அவருடன் சேர்ந்து சூப்பர் ஜோடி 2 நிகழ்ச்சியில் நடித்தேன். அதை வைத்து எங்களுக்குள் காதல் என்று சொல்ல முடியாது' என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்