அண்ணன் – தம்பி விலகல்; மூடுவிழா காணுமா பச்சை நிறுவனம்?

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (14:24 IST)
பச்சை தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அண்ணனும், தம்பியும் விலகிவிட்டதால், அந்த நிறுவனம் தொடர்ந்து இயங்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.


 


அண்ணன் – தம்பி நடிகர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த பச்சை தயாரிப்பு நிறுவனம். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் செய்யும் அடாவடிகள் கொஞ்சநஞ்சமல்ல. நல்ல கதையாக இருந்தால், ‘நாம படம் பண்ணலாம்’ என்று சொல்லி பைண்ட் ஸ்கிரிப்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு ஐந்தாறு வருஷத்துக்கு அலைக்கழிப்பார்கள். அதற்குள் அவனுக்கு சினிமா எடுக்கிற ஆசையே போய்விடும்.

அப்புறம், கதையில் ‘இது சரியில்லை… அது சரியில்லை…’ என்று சொல்லி, இயக்குநரின் கதையையே மாற்றிவிடுவார்கள். அதாவது பரவாயில்லை. அண்ணனுக்கு வரும் நல்ல கதைகளையெல்லாம், தம்பிக்கு மாற்றிவிடுவார்கள். அத்துடன், கணக்கு வழக்கிலும் தில்லுமுல்லு நடக்க, அண்ணன் தனி தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்து ஒதுங்கிவிட்டார்.

தற்போது, தம்பியும் அந்த நிறுவனத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறாராம். அதன் முதற்கட்டமாக, அண்ணன் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறாராம். எனவே, அண்ணன் – தம்பியை வைத்துப் பிழைப்பு நடத்திவந்த பச்சை நிறுவனம் தொடர்ந்து இயங்குவதில் கேள்வி எழுந்துள்ளது.
 
அடுத்த கட்டுரையில்