சின்ன நம்பர் நடிகையின் இடம்நோக்கி பெரிய நம்பர் நடிகை?

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (17:58 IST)
சின்ன நம்பர் நடிகையின் இடம்நோக்கிப் பெரிய நம்பர் நடிகை நகர்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் ஹீரோயின்களாக வலம் வருபவர்கள் சின்ன நம்பர் நடிகையும், பெரிய நம்பர் நடிகையும். இருவருமே பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டனர். தற்போது ஹீரோக்களுடன் டூயட் பாடுவது மட்டுமின்றி, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகின்றனர்.

இருவருக்குமே கைநிறைய படங்கள் இருக்கின்றன. ஆனால், அவை எப்போது ரிலீஸாகும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. காரணம், கடந்த வருடம் சின்ன நம்பர் நடிகைக்கு ஒரு படம் கூட ரிலீஸாகவில்லை. இந்த வருடம் கூட ஒரே ஒரு மலையாளப் படம்தான் ரிலீஸானது. தமிழில் ஒரு படம்கூட ரிலீஸாகவில்லை. ஆனால், கடந்த வருடம் பெரிய நம்பர் நடிகைக்கு 3 படங்கள் ரிலீஸாகின. இந்த வருடம் ஒரே ஒரு தெலுங்குப் படம் மட்டுமே ரிலீஸாகியுள்ளது. வருடத்தின் பாதி முடிய இருக்கிற நிலையில், இன்னும் ஒரு தமிழ்ப் படம் கூட ரிலீஸாகவில்லை. எனவே, சின்ன நம்பர் நடிகையைப் போல இறக்கத்தைச் சந்திக்கிறாரா பெரிய நம்பர் நடிகை என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்