இனி முன்பு போல் சேனாதிபதியை பொதுவெளியில் அடிக்கடி பார்க்க முடியாது என்கிறார்கள். ம்... தலக்கு இப்படியொரு போட்டியா?
கடவுளும் சரி, நடிகனும் சரி... ரொம்ப நெருக்கமா பார்த்தால் சுவாரஸியம் போய்டும். நாம தலைகீழாக நின்றாலும் கிடைக்காத ஸ்டார்பவர் வெளியே தலையே காட்டாத நடிகருக்கு கிடைத்திருக்கிறதே என்று சேனாதிபதியின் இளைய மனசுக்குள் எப்போதுமே ஒரு நெருடல்.
அடிக்கடி பொதுவெளியில் பார்க்க முடிவதால்தான் ஒங்க பேசுக்கு பவர் இல்லாமல் போயிடுச்சி என்று நலம்விரும்பிகள் சொன்னதில் சேனாதிபதிக்கும் உடன்பாடாம். அதனால்தான் முதல்கட்டமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து குடும்பத்துடன் யுஎஸ் பறந்திருக்கிறார்.