இந்த வழக்கில் தேவர் மகன், குணா உள்பட 109 படங்களின் உரிமை பெற்றுள்ளதாகவும், இளையராஜா மனைவி பெயரில் உள்ள நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல்களை YouTube சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதால், அதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எதிர்மனுதாரராக இசைஞானி இளையராஜா சேர்க்கப்பட்ட நிலையில், இன்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் குறுக்கு விசாரணை இன்று நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.