நடிகை சார்மியை காதலித்து ஏமாற்றியது யார்?

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (17:29 IST)
சிம்பு நடித்த 'காதல் அழிவதில்லை' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை சார்லி அதன் பின்னர் பல தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

இந்த நிலையில் 30 வயதாகும் சார்மிக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. அவரது ரசிகர்கள் திருமணம் எப்போது என்று தொடர்ந்து கேள்வி கேட்டு வரும் நிலையில் தான் திருமணமே செய்ய போவதில்லை என்று கூறியுள்ளார்

தான் ஒருவரை உயிருக்குயிராக காதலித்ததாகவும், ஆனால் இரண்டு விஷயங்களில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பிரிய நேர்ந்ததாகவும் கூறிய சார்மி, ஒருவேளை தங்களுக்கு திருமணம் நடந்திருந்தாலும் இந்த இரண்டு விஷயங்களுக்காக பிரிந்திருப்போம் என்று சார்மி கூறியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் நடிகை சார்மியும் காதலித்து வந்ததாகவும், அவர்தான் சார்மியை ஏமாற்றிய காதலனாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்