நயன்தாரா தெய்வப்பெண்.... என்னிடம் வந்தால் சிம்புவுக்கு திருமணம்!

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (17:42 IST)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது. 
 
அந்தவையில் தற்போது சிவகங்கை சேர்ந்த லட்சுமி அம்மா என்பர் நடிகர் நடிகைகளை குறித்து குறி சொல்லியிருக்கிறார். “நடிகைகள் போலியாக சிரித்து நடித்துக்கொண்டு உள்ளே வேதனைகளை அடக்கி வைத்திருக்கின்றனர். சினிமா தொழிலை அவர்கள் விரும்பி வேலைபார்க்கிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் பெரும் பிரச்சனை நேரும் சமயத்தில் மனமுடைந்து திருமணம் செய்துக்கொள்கிறார்கள். 
 
அந்த திருமண வாழ்க்கையிலும் ஏமாற்றம் ஏற்படும் போது அது அவர்களை அதிகளவில் பாதிக்கிறது. அந்த துயரத்தில் இருந்து வெளியில் வந்த த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்ற நடிகைகள் தெய்வப் பெண்கள்” என கூறியுள்ளார்.அதே போல் நடிகர் சிம்புவுக்கு தோஷம் இருக்கிறது அவர் என்னிடம் வந்து நான் கூறும் பரிகாரம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்