இந்தியாவில் அதிகமான ரேம் மற்றும் மெமரி வசதியுடன் கூடிய குறைந்த விலை பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோனான itel P55+ அறிமுகம் ஆகியுள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன்களின் தேவையும், உற்பத்தியும் அதிகமாக உள்ள நிலையில் ஏராளமான நிறுவனங்கள் போட்டிப்போட்டு பல மாடல் ஸ்மார்ட்ஃபோன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. பொதுவாக ஒரு ஸ்மார்ட்ஃபோனின் RAM மற்றும் மெமரி கெபாசிட்டி பொருத்து விலையும் அதிகரிக்கும்.
இந்நிலையில் ஐடெல் நிறுவனம் அதிக ரேம் மற்றும் மெமரி கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
itel P55+ ஸ்மார்ட்ஃபோன் சிறப்பம்சங்கள்:
6.6 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே
யுனிசாக் டி606 சிப்செட்
ஆக்டாகோர் ப்ராசஸர், மாலி ஜி57 எம்பி1 ஜிபியூ
ஆண்ட்ராய்டு 13
8 ஜிபி ரேம் + 8ஜிபி விர்ச்சுவல் ரேம்
256 ஜிபி இண்டெர்னல் மெமரி
50 எம்பி ப்ரைமரி டூவல் கேமரா
8 எம்பி முன்பக்க செல்பி கேமரா
5000 mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்த itel P55+ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.9,499 (வங்கி சலுகைகள் உட்பட) என கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 13ம் தேதி முதல் இந்த itel P55+ ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான் தளத்தில் தொடங்குகிறது.