வாட்ஸ்அப் பேமெண்ட் சர்வீஸ் தாமத்திற்கு காரணம் என்ன?

வெள்ளி, 29 ஜூன் 2018 (16:25 IST)
வாட்ஸ்அப் பேமெண்ட சர்வீஸ் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள் வெளியாகி உள்ளன.

 
வாட்ஸ்அப் மூலம் பணப்பரிமாற்றம் வசதியை முதல்முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சோதனைக்காக இந்த வசதி வழங்கப்பட்டது.
 
ஐசிஐசிஐ வங்கியுடன் கூட்டு வைத்து யூபிஐ மூலம் பணப்பரிமாற்றம் வசதியை வழங்கியது. இதற்காக இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷனிடம் அனுமது பெற்றது. சமீபத்தில் பணப்பரிமற்றம் வசதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வாட்ஸ்அப் அதன் கொள்கைகளில் சற்று மாற்றம் கொண்டு வந்தது.
 
இதனிடையே ஆர்பிஐ பயனர்களின் பாதுகாப்பு அம்சம் குறித்து கேள்விகளை முன்வைத்தது. இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன், வாட்ஸ் பணப்பரிமாற்ற வசதியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த இன்னும் அனுமதி வழங்கவில்லை.
 
ஆர்பிஐ-யின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாட்ஸ்அப் பணப்பரிமாற்ற வசதியை வழங்க வேண்டும் என்பதால் வாட்ஸ்அப் இந்த வசதி அதிகாரப்பூர்வமாக வெளியாக காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்