வாட்ஸ் அப்-க்கு போட்டியாக பாபா ராம்தேவ் ஆரம்பிக்கும் மெசேஜ் ஆப்

புதன், 30 மே 2018 (22:10 IST)
ஜியோவுக்கு போட்டியாக சமீபத்தில் சிம்கார்டை அறிமுகம் செய்த பாபாராம்தேவ், தற்போது வாட்ஸ் அப்-க்கு போட்டியாக மெசேஜ் ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை பதஞ்சலி செய்தி தொடர்பாளர் திஜாராவாலா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
 
'கிம்போ' என்ற பெயருடைய இந்த மெசேஜ் ஆப், பாபாராம்தேவின் சுதேசி சம்ரிதி சிம்கார்டு வழக்கத்திற்கு வந்தவுடன் செயல்பட தொடங்கும் என்றும் வாட்ஸ் அப் போன்றே இதில் மெசேஜ்களை ஒருவருக்கொருவர் இலவசமாக பரிமாறி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வாட்ஸ் அப்பை குறித்து வைத்து இந்த ஆப் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படினும் ஏற்கனவே கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்-ஐ இந்த மெசேஜ் ஆப் வீழ்த்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்