கொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்றிய வாட்ஸ்அப்

ஞாயிறு, 24 ஜூன் 2018 (15:41 IST)
வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவிக் பணப்பரிமாற்றம் சேவையை சோதனை செய்துவரும் நிலையில் அதன் கொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்றியுள்ளது.

 
வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பணப்பரிமாற்றம் செய்யும் வசதி முழுமையாக வழங்கும் முன் வெளியிடப்படும் முன் தனது கொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் தற்போது சுமார் பத்து லட்சம் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றனர். இந்த புதிய வசதிக்காக வாட்ஸ்அப் அதன் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றியுள்ளது. 
 
வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய அரசு, தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் மற்றும் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பரிமாற்ற வசதியை தனது செயலியில் வழங்க இருக்கிறது. விரைவில் இந்த அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்