ரயில் எங்கே இருக்கிறது என்பதை அறிய உதவும் வாட்ஸ்அப்
வியாழன், 19 ஜூலை 2018 (19:49 IST)
ரயில் எங்கே இருக்கிறது என்பதை வாட்ஸ்அப் மூலம் எளிதாக தெரிந்துக் கொள்ளும் வசதி எளிதாக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலி தற்போது நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் பல்வேறு சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த செயலில் புதிய வசதிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரயில்கள் எங்கே இருக்கிறது எப்போது நாம் இருக்கும் தளத்திற்கு வரும் என்பதை அறிய ஏற்கனவே ரயில்வே துறை சார்பில் எண்கள் வழங்கப்பட்டது. அந்த எண்ணிற்கு ரயில் எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பினால் அந்த ரயில் குறித்த முழு விவரம் நமக்கு வந்தடையும்.
ரயில் தற்போது எங்கே வந்துக்கொண்டிருக்கிறது. அடுத்து எந்த ஸ்டேசனுக்கு வரும். எத்தனை நிமிடங்களில் அந்த ரயில் சேர வேண்டிய இடத்திற்கு சென்றடையும் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கும்.
இந்த எண்ணை 7349389104 உங்கள் மொபைலில் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த எண்ணிற்கு உங்களை தேவையான ரயில் எண்ணை அனுப்பினால். 10 வினாடிகளில் ரயில் ஓட்டம் குறித்த தகவல் கிடைக்க பெறும்.