இந்நிலையில் சதீஷ் கடந்த 2 ந் தேதி, தனது நண்பர்களுடன் திருச்சி மாவட்ட தொட்டியம் அருகே உள்ள ஆற்றின் ஓரம் அமர்ந்து மது குடித்துள்ளார். போதை தலைக்கு ஏறிய நிலையில் அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.
இதனையறிந்த அவரது நண்பர்கள், போதையில் சதீஷை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். பின் சதீஷின் நண்பர்கள், பிணத்தை வண்டியில் வைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்று, அங்கு வைத்து பிணத்தை எரித்துள்ளனர்.
எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது சதீஷின் நண்பர்கள் 4 பேர் சிக்கினர்.