வாட்ஸப்பின் புதிய கொள்கைகள் மற்றும் நிபந்தனைகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் வாட்ஸப் தனது ஸ்டேட்டஸ் ஆப்சன் மூலமாகவும் விளக்கம் அளித்து வருகிறது.
தகவல் பரிமாற்றத்திற்காக உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸப் சமீபத்தில் புதிய நிபந்தனைகள் மற்றும் தனிநபர் கொள்கைகளை வெளியிட்டது. இதன்மூலம் தனிநபர் தகவல்களை வாட்ஸப் சேமிக்கப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து பலர் வாட்ஸப்பை விடுத்து டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் புதிய கொள்கைகள் குறித்து வாட்ஸப் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. பிப்ரவரி 8க்குள் நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஆப் நீக்க செய்யப்படும் என்ற தகவல் பொய்யானது என கூறியுள்ள வாட்ஸப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு இதை விளக்கும் விதமாக ஸ்டேட்டஸ் ஆப்சனிலும் ஸ்டேட்டஸ்களை வைத்துள்ளது.