MX Takatak வாங்கியது ஷேர்சாட் நிறுவனம்!

வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:21 IST)
MX Takatak செயலியை ShareChat நிறுவனத்தின் தாய் நிறுவனமான மொஹல்லா டெக் வாங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
இந்தியாவில் டிக் டாக் அடைந்த அசுர வளர்ச்சியை கண்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக மத்திய அரசு சீன செயலிகளை தடை செய்ததை அடுத்து டிக்டாக் போல் ஷார்ட் வீடியோக்களை பதிவேற்றும் பிற ஆப்கள் பக்கம் இந்தியர்கள் கவனம் திரும்பியது. 
 
இந்தியப் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மற்றொரு ஷார்ட் ஃபார்மெட் வீடியோக்களை பகிரும் ஆப் ஆன MX  Takatak செயலியை மொஹல்லா டெக் நிறுவனம் வாங்கியுள்ளது. மொஹல்லா டெக் ShareChat நிறுவனத்தின் தாய் நிறுவனமாகும். இதன் மூலம் Sharechat-ன் moj மற்றும் MX  Takatak இணைய உள்ளது. 
 
சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5,250 கோடியை கொடுத்து டகாடக்கை விலைக்கு வாங்கியுள்ளது மொஹல்லா டெக் நிறுவனம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்