இந்தியாவில் மிக குறைந்த விலையில் பல நிறுவனங்களும் ஸ்மார்ட்போன்கள் வெளியிட்டு வரும் நிலையில் ரெட்மி அறிமுகப்படுத்தியுள்ள Redmi A2 பலரையும் கவர்ந்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் பலரையும் கவரும் வகையில் நார்மலான சிறப்பம்சங்களுடன் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் ஷாவ்மி நிறுவனம் தனது புதிய Redmi A2 பட்ஜெட் ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
Redmi A2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
6.52 இன்ச் டிஸ்ப்ளே
மீடியாடெக் ஹெலியோ G36 சிப்செட்
ஆக்டாகோர் ப்ராசஸர்
2 ஜிபி / 4 ஜிபி ரேம் + 3 ஜிபி விர்ச்சுவல் ரேம்
64 ஜிபி இண்டெர்னல் மெமரி
512 ஜிபி வரை சப்போர்ட் செய்யும் மெமரி ஸ்லாட்
8 எம்.பி + டெப்த் சென்சார் டூவர் ப்ரைமரி கேமரா
5 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
ஆண்ட்ராய்டு 13
5000 mAh பேட்டரி, 10W பாஸ்ட் சார்ஜிங்
இந்த Redmi A2 ஸ்மார்ட்போனில் 5ஜி கிடையாது. 4ஜி வரை மட்டுமே உண்டு. க்ளாசிக் ப்ளாக், அக்குவா ப்ளூ, சீ க்ரீன் ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த Redmi A2 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
Redmi A2 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.6,299 என்றும், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.7,999 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பம்சங்களுடன் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் இதுதான் குறைந்த விலை என கூறப்படுகிறது. கேமரா குவாலிட்டி பெரிதாக இல்லையென்றாலும் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்ற சிறப்பம்சங்களோடு இந்த Redmi A2 ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.