மொபைல் வாலட்டுகளுக்கு தடையா – ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு !

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (13:55 IST)
ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாவிட்டால் கூகுள் பே, அமேசான் பே கணக்குகள் முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கூகுள்பே, பேடிஎம், போன்பே, ஏர்டெல்மணி, எம்ஐ பே, அமேசான் பே போன்ற பல மொபைல் வாலட்கள் இளைஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல அக்கவுண்ட்கள் KYC எனப்படும் வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கிகளோடு இணைக்காமல் செயல்பட்டு வருகின்றன.

அதனால் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் KYC ஜெனரேட் செய்யாத மொபைல் வாலட்கள் முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த தகவலால் அதிகளவில் மொபைல் வாலட்டுகளைப் பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்