பேடிஎம் வழங்கும் இலவச டிவிக்கள் – மேலும் பல சிறப்பம்சங்கள்

Webdunia
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (19:20 IST)
பிரபல ஆன்லைன் பன பரிவர்த்தனை அப்ளிகேசனான பேடிஎம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரிக்க தொடங்கின. அப்போது இந்தியாவில் பல வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றது பேடிஎம் அப்ளிகேசன். தற்போது பேடிஎம் மொபைல் அப்ளிகேசனில் உள்ள பேடிஎம் மால் என்ற வசதியின் மூலம் அடிக்கடி சலுகை விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன் மூலம் பயனாளிகள் பேடிஎம் நிறுவனத்துக்கு அதிகரித்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் 27 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள பேடிஎம் மேலும் இதை விரிவுப்படுத்த முயற்சித்து வருகிறது. அதன் முதற்கட்டமாக ஷாவ்மி, ஓப்போ, விவோ போன்ற பிரபல மொபைல் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருகிறார்கள். இந்த கம்பெனி மொபைல்களை வாங்கினால் அதில் பேடிஎம் ஏற்கனவே இன்ஸ்டால் ஆகியிருக்கும். எனவே இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள்.

அமேசான் நிறுவனம் திரைப்படங்கள், டிவி தொடர்களை தனது அப்ளிகேசன் மூலமாக வழங்க தொடங்கியதிலிருந்து மிக பிரபலம் ஆனது. அதே வழியை பின்பற்ற ப்ளிப்கார்ட்டும் திட்டமிட்டு வருகிறது. தற்போது அந்த வழியில் பேடிஎம் நிறுவனமும் தங்கள் அப்ளிகேஷன் மூலம் செய்திகள், சிறு வீடியோ தொகுப்புகள் மற்றும் லைவ் டிவி போன்ற வசதிகளை இலவசமாக கொடுப்பது பற்றி ஆலோசித்து வருகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் செப்டம்பரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் பயனாளிகளுக்கு இலவச லைவ் டிவி சேவையை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்