இந்தியாவில் பணப்பரிவர்த்தனை தொடங்கும் ஒன்ப்ளஸ்! – ட்ரேட்மார்க் பெற விண்ணப்பம்!

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (10:31 IST)
பிரபல செல்போன் நிறுவனமான ஒன் ப்ளஸ் இந்தியாவில் தனது பண பரிவர்த்தனை சேவையை தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களும் விற்பனையாகி வரும் நிலையில் அவற்றில் குறிப்பிட தகுந்த அளவு கவனம் பெற்ற செல்போன் நிறுவனம் ஒன் ப்ளஸ். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக செல்போன் விற்பனையில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ஒன் ப்ளஸ் தற்போது பண பரிவர்த்தனையிலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

ஒன் ப்ளஸ் பே என்ற செயலி மூலம் தனது பரிவர்த்தனை சேவையை தொடங்க திட்டமிட்டுள்ள ஒன் ப்ளச் நிறுவனம் இதற்கான ட்ரேட்மார்க் அனுமதியை பெற இந்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்