அமேசானின் ப்ரைம் வீடியோ பல்வேறு வெப்சிரீஸ், திரைப்படங்களை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்கென பிரத்யேகமாக மாத, வருட சந்தாக்களும் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் அமேசான் இணைந்து ப்ரைம் வீடியோ ஆஃபர் ஒன்றை வெளியிட்டன.
அதன்படி ஏர்டெலின் குறிப்பிட்ட ரீசார்ஜ் ப்ளான்களுக்கு அமேசான் ப்ரைம் மொபைல் எடிசன் சேவை இலவசமாக கிடைக்கும். இந்த திட்டம் அறிவிக்கப்பட்டும் அது பயனாளர்களை அதிகளவில் சேரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப்ரைம் வீடியோ “ஹை ஏர்டெல்.. நாம எப்படி ப்ரைம் வீடியோ மொபைல் எடிசனை ப்ரோமோட் செய்ய போறோம்? நாம் மார்க்கெட்டிங் ஐடியாக்களுக்கு அருகில் வர வேண்டும்” என தெரிவித்துள்ளது. அதாவது இந்த ஆஃபர் தொடங்கி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ஏர்டெல் முறையாக இதை விளம்பரப்படுத்தாதது போல அமேசான் பதிவிட்டுள்ளது.