நொடியில் சார்ஜ் ஆகும் ஸ்மார்ட்போன் சார்ஜர் அறிமுகம்!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2016 (17:17 IST)
சார்ஜ் செய்த சில நொடிகளிலேயே பேட்டரியை நிறைக்கும் வகையிலான சார்ஜரை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நானோ தொழில்நுட்பத்தில் உருவான சார்ஜர்

இன்றைய தேதிகளில் மொபைல் போன் பயன்பாடு அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருகிறது. மொபைல் போன் ஒன்றில், மிக முக்கிய உறுப்பாக அதன் பேட்டரி உள்ளது.

ஆனால், நமக்கு தேவையான முக்கிய வேளைகளில், இதன் பேட்டரி தீர்ந்து போய்விடுவதால், மொபைல் போனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே மறுபடியும் சார்ஜ் செய்திட அலைய வேண்டியதுள்ளது. இப்படி சார்ஜ் இல்லாமல் அவதிக்குள்ளாவது அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது.

இந்த சார்ஜ் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக ஒருசில வினாடிகளில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

'பிளக்சிபிள் சூப்பர் கெபாசிட்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருசில வினாடிகளில் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து விடலாம்.

அமெரிக்காவின் மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கும் இந்த பேட்டரிகளை, நானோ தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பேட்டரி சாதாரண பேட்டரிகளை விட அதிக சக்தி கொண்டதாக இருக்கும். 30,000 முறை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புதான் என்றும், இந்த பேட்டரிகள் சந்தைக்கு வர இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்