பேஸ்புக் இனி காலி ...இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 100 கோடி...

வியாழன், 31 ஜனவரி 2019 (16:39 IST)
ஃபேஸ்புக் நிறுவனத்தின்  தலைவர், மார்க் ஜூகர்பெர்க், ஃபேஸ்புக் அந்நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிஸ் அம்சத்தை ஒவ்வொரு மாதமும் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக கூறினார்.
மேலும் தற்போது இன்ஸ்டாகிராம் செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகிறது.
 
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தின் போது சுமார் 40 கோடி பேர் இதைப் பயன்படுத்தி வந்த நிலையில் அடுத்த ஆறு மாதத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 10 கோடி வரை அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன.
இன்ஸ்டாகிராம் கடந்த 2016 ஆம் ஆண்டுதான் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் புகைப்படம் வீடியோ போன்றவற்றை ஸ்டோரிஸாக பதிவிடலாம் என்பதால் பலர்  ஆர்வத்துடன் தம் புகைப்படம், நிகழ்சிகளை பதிவிட்டு வருகின்றனர்.
 
இனிமேல் ஃபேஸ்புக்குக்கு மிகப்பெரும் சவாலாக இன்ஸ்டாகிராம் இருக்கும் என்று தகவல் பரவி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்