Cheap and Best! மிக குறைந்த விலையில் Realme C51! – சிறப்பம்சங்கள் என்ன?

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (12:56 IST)
இந்தியாவில் மிக குறைந்த விலையில் தனது புதிய Realme C51 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம்.



என்னதான் நாடு முழுவதும் 5ஜி சேவைகள் அதிகரிப்பு, 5ஜி ஸ்மார்ட்போன்கள் என அப்டேட் ஆகி வந்தாலும் அதற்கு ஈடாக 4ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனையும் இருந்து வருகிறது. மேலும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்தால் மிகவும் குறைவான விலைக்கு 4ஜி ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன.

அப்படியாக தற்போது ரியல்மி நிறுவனத்தின் புதிய Realme C51 4G ஸ்மார்ட்போன் மிகக் குறைந்த விலையில் பல சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது.

Realme C51 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.74 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 90Hz ரெப்ரெஷ் ரேட்
  • யுனிசாக் T612 சிப்செட், ஆக்டாகோர் ப்ராசஸர்
  • 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 64 ஜிபி / 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 2 TB வரை நீடிக்கக்கூடிய மெமரி ஸ்லாட்
  • 50 எம்பி + 0.08 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா
  • 5 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 5000 mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங்
  • ரிவர்ஸ் சார்ஜிங் வசதி

இந்த Realme C51 ஸ்மார்ட்போன் மிண்ட் க்ரீன், கார்பன் ப்ளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இதன் ஆரம்ப விலை ரூ.8,999 என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 11ம் தேதி இதன் விற்பனை தொடங்க உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்