நொடிப் பொழுதில் பேங்க் அக்கவுன்ட் காலி! – உலக நாடுகளை மிரட்டும் ப்ராட்டா ட்ரோஜன்!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (11:27 IST)
கணினிகளில் புகுந்து தரவுகளை முடக்கும் ட்ரோஜனின் மற்றும் வைரஸ் வங்கி கணக்குகளை முடக்கி வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் கணினிமயமாகியுள்ள நிலையில் கணினிகளில் புகுந்து தரவுகளை திருடும் வைரஸ்களின் செயல்களும் அதிகரித்துள்ளது. அவ்வகையான வைரஸ்களில் முக்கியமான வைரஸாக இருப்பது ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan Horse) என்னும் இணைய வைரஸ். பல கணினிகளை முடக்கிய இந்த வைரஸின் அப்டேட் வெர்சன் தற்போது ஆண்ட்ராய்டு சிஸ்டங்களையும் தாக்க தொடங்கியுள்ளது.

இதன் அப்டேட்டான வெர்சனான BRATA (Brazilian Remote Access Tool Androd) என்னும் வைரஸ் கடந்த 2018ம் ஆண்டிலேயே பிரேசிலில் கண்டறியப்பட்டது,. ஆனால் முன்பை விட இந்த வைரஸ் தற்போது அப்டேட் ஆகியிருப்பதாகவும், வங்கி கணக்குகளை நொடி பொழுதில் காலி செய்துவிடும் இந்த வைரஸ் தற்போது ப்ரேசில் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் தொடங்கி இங்கிலாந்து, இத்தாலி, போலந்து உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற மால்வேர்களில் இருந்து தப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை தவிர பிற செயலிகளை தரவிறக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் தர செயலிகளை நிறுவதன் வழியாக செல்போனில் புகும் ப்ராட்டா அங்கிருந்து வங்கி தகவல்களை திரட்டி ஹேக்கர்களுக்கு அனுப்புவதால் பயனர்கள் உஷாராக இருக்க வேண்டும் தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்