Most Expected Launch! புதிய ஐபோன் 14 சீரிஸ் எப்படி??

வியாழன், 8 செப்டம்பர் 2022 (08:37 IST)
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.


உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள செல்போன் நிறுவனங்களில் முக்கியமான ஒன்று ஆப்பிள். இதன் ஐபோன் மாடல்கள் ஒவ்வொருமுறை அறிமுகம் ஆகும்போதும் பலர் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் இந்த செய்தியில் இதன் விவரங்களை காண்போம்…

ஐபோன் 14 சீரிஸ் சிறப்பம்சங்கள்:

# 6.1 இன்ச் 2532x1170 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே (ஐபோன் 14)
# 6.7 இன்ச் 2778x1284 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே (ஐபோன் 14 பிளஸ்)
# 6 கோர் ஏ15 பயோனிக் பிராசஸர்
# 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி
# ஐஒஎஸ் 16 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
# டூயல் சிம்
# 12 MP வைடு ஆங்கில் கேமரா
# 12 MP அல்ட்ரா வைடு இரண்டாவது கேமரா
# 12 MP செல்பி கேமரா
# முக அங்கீகார வசதி வழங்க ட்ரூ டெப்த் கேமரா
# 5ஜி, ஜிகாபிட் கிளாஸ் எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.3
# லித்தியம் அயன் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி
# நிறம்: மிட்நைட், பர்பில், ஸ்டார்லைட், புளூ மற்றும் பிராடக்ட் ரெட்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்