இந்தியாவில் வெளியாகுமா iPhone 14 Pro? – மக்கள் எதிர்பார்ப்பு!

வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (09:47 IST)
பிரபலமான ஐபோன் நிறுவனத்தின் புதிய மாடலான iPhone 14 Pro இந்தியாவில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள செல்போன் நிறுவனங்களில் முக்கியமான ஒன்று ஆப்பிள். இதன் ஐபோன் மாடல்கள் ஒவ்வொருமுறை அறிமுகம் ஆகும்போதும் பலர் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் ஐபோன் நிறுவனம் தற்போது அதிநவீன வசதிகளுடன் கூடிய iPhone 14 Pro என்ற புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. புதிதாக இதில் நேரடி செயற்கைக்கோள் அழைப்பு வசதி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த மாடல் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்தியாவில் வெளியாகுமா என்பது சந்தேகத்திற்கு இடமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை நேரடி சேட்டிலைட் தொடர்பு வசதி ஐபோனில் இருந்தால் அதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில் iPhone 14 Pro எப்போது வெளியாகும் என பலர் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்