மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அபராதம் – பிசிசிஐ உத்தரவு!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (11:36 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவிய நிலையில் அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விருவிருப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த மும்பை அணி 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவதாக களம் இறங்கிய டெல்லி அணி 19வது ஓவரிலேயே 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்றைய டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச கால தாமதம் செய்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்